18-3-22/12.47pm
குஜராத் : குஜராத் மாநிலம் வாபியில் உள்ள பிரபலமான ஒரு பள்ளியில் இரு மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என கூறி வணக்கம் வைத்துக்கொண்டதால் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாபியில் அமைந்துள்ளது பிரபல கிறித்துவ மிஷனரி பள்ளியான செயின்ட் மேரிஸ். இங்கு ஒன்பதாம் வகுப்பு பயிலும் இரு சிறுவர்கள் பள்ளி வராண்டாவில் ஒருவருக்கொருவர் ஜெய்ஸ்ரீராம் எனக் கூறிக்கொண்டனர். அதையடுத்து பள்ளி ஒழுக்க நடவடிக்கைகள் ஆசிரியரான சர் கல்பேஷ் பகத் என்பவர் அந்த இரு சிறுவர்களிடம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கடிதம் வாங்கியதோடு பள்ளியை விட்டு இடைநீக்கம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவர்களின் பெற்றோர்கள் விஸ்வ பரிஷத் வாபி பிரிவு துணைத்தலைவரான நரேந்திர பயக்கிடம் முறையிட்டனர். களமிறங்கிய வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங் தள பள்ளியின் முன் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பள்ளி முதல்வரான சாவியோ கேத்தினா மற்றும் கல்பேஷ் ஆகியோர் பெற்றோர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்.


“நாங்கள் நடந்த தவறுக்கு வருந்துகிறோம். பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறோம். வேறுவழியில் நாங்கள் தண்டித்திருக்கலாம்” என எழுத்துப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். வி.ஹெச்.பி தலைவர் சுஷில் “ஹிந்துக்களின் பண்டிகையின்போது கையில் சிகப்பு நூலை அணிந்திருந்தால் கூட ஹிந்து மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
…..உங்கள் பீமா
