Monday, November 11, 2024
Home > செய்திகள் > செங்கல்பட்டு இரட்டைக்கொலை…! வேலையை காட்டிய என்கவுண்டர் வெள்ளத்துரை..?

செங்கல்பட்டு இரட்டைக்கொலை…! வேலையை காட்டிய என்கவுண்டர் வெள்ளத்துரை..?

07-01-22/11.10am

செங்கல்பட்டு : கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் நடைபெறுகின்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் தமிழக மக்களை பீதியில் உறையச்செய்துள்ளது. அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் கொலைகள் துப்பாக்கி கலாச்சாரம் என தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை அரங்கேறியிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செங்கல்பட்டில் நேற்று காவல்நிலையம் அருகே வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு கே தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற அப்பு. இவர்மீது கொலை கொள்ளை உட்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று கார்த்திக் ஒரு வழக்கில் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கூட்ட நெரிசல் மிகுந்த காவல்நிலையம் அருகே கார்த்திக் மீது வெடிகுண்டுகளை வீசியது.

`

அதில் நிலைகுலைந்த அவர் கீழே சாய்ந்தபின் கொடூர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி தலையை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. தப்பியோடிய அந்த கும்பல் நேராக மேட்டுத்தெரு பகுதிக்கு சென்று அங்கு காய்கறி வியாபாரம் பார்த்தித்து வரும் சீனிவாசன் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த சீனிவாசனின் மகன் மகேஷை வெட்டி வீசியது.

அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் செங்கல்பட்டே பரபரப்பானது. இந்த கொலைகளில் ஈடுபட்ட இருவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து தினேஷ் மாது மைதீன் மற்றும் படப்பை குணா சேர்ந்த ரவுடி மூவரையும் போலீசார் வலைவீசி தேடினர். தனிப்படை போலீஸ் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் மைதீன் தினேஷ் ஆகிய இருவரும் செங்கல்பட்டு காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

```
```

போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது தாக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். மேலும் இந்த கொலைகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள படப்பை குணா என்பவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

…..உங்கள் பீமா