Friday, June 2, 2023
Home > செய்திகள் > இந்துமுன்னணி சார்பில் உண்ணாவிரத அறப்போர் தொடங்கியது..!!

இந்துமுன்னணி சார்பில் உண்ணாவிரத அறப்போர் தொடங்கியது..!!

தமிழக திமுக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததை அடுத்து இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் புதிய தமிழகம் பிஜேபி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

சிலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டுக்கே சென்று சிலைகளை தமிழக போலீசார் அதிரடியாக கைப்பற்றி வருகின்றனர். மேலும் ஆந்திரா கர்நாடகா எல்லையில் எப்போதும் இல்லாத அளவுக்கு போலிஸார் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து வரும் விநாயகர் சிலைகளை மடக்கி பிடிக்கின்றனர். சிலை செய்து பிழைப்பை நடத்திவரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியானது. மேலும் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பிடுகையில் ” டாஸ்மாக் மால்கள் தியேட்டர்கள் உள்ளிட்டவை திறந்து வைக்கும்போது இந்துக்களின் பண்டிகையை சாதி செய்து முடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.” என கூறுகின்றனர்.

`

இந்நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விநாயகர்சதுர்த்திக்கு விதித்த தடையை நீக்க வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போர் நடைபெற்றுவருகிறது.

இதில் இந்துமுன்னணி தொண்டர்கள் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டு வருகின்றனர். தமிழக அரசுக்கு நல்ல புத்தி கொடு என இருதினங்களுக்கு முன்னர் இந்துமுன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் பிரார்த்தனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

..உங்கள் பீமா