காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு வங்கி தனியார் வங்கி அரசு வங்கி பொதுத்துறை வங்கி என அனைத்திலும் ஊழல் மிகுந்திருந்ததாக செய்திகள் எடுத்துரைத்தது. அதிலும் எஸ் பேங்க் மோசடி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 2600 கோடிக்கு மேலாக பணமோசடி செய்தது 2018-2019 ல் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து அமலாக்கப்பிரிவு 10 ஜூலை 2020அன்று ராணா கபூர் மற்றும் அவரது மகள் ராதா கபூர் மற்றும் அவரது மனைவி பிந்து கபூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
நியூயார்க் ஆஸ்திரேலியா லண்டன் டெல்லி புனே உட்பட பல நகரங்களில் உள்ள சொத்துக்களும் முறைகேடாக வாங்கியது கண்டறியப்பட்டது, அதையடுத்து இந்த வழக்கில் DHFL கபில் வதவான், தீரஜ், ரோஷினி, எஸ் பேங்க் நிறுவனர் குடும்பத்தினர் உட்பட பலர் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டனர்.
வழக்கானது இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாமீன் முடிவடைந்துவிட்ட நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கபூர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராணா கபூர் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.