4-11-21 / 12.45pm
தமிழகத்தில் தோன்றிய திடீர் போராளிகளில் முக்கியமான இடத்தை பிடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. கருப்பன் என்கிற திரைப்பட ரிலீஸின்போது தேசிய விருது பற்றி சர்ச்சையான கருத்தை கூறினார். மேலும் தனக்கு இந்தி தெரியாது. கற்றுக்கொள்ள விருப்பமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு நடத்தப்பட்ட ஒரு பிறந்த நாள் விழாவில் இந்தியில் பேசி விழாவை நடத்திய வடக்கத்திய மக்களை சந்தோச கடலில் ஆழ்த்தினார். மேலும் டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் முதல் ஆளாக கலந்து கொண்டார். தொழில் வேறு வாழ்வு வேறு பேசும் வாய் வேறு என அழகாக நிரூபித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி பெங்களூர் விமான நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது பின்னால் ஓடி வந்த ஒருவர் ஏறி மிதிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. இதுகுறித்து சன் நியூஸ் வழக்கம் போல செய்தியை திரித்து வெளியிட்டது.

“பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வரும் செய்தி உண்மையில்லை. விஜய் சேதுபதியுடன் சென்ற அவரது நண்பர் மகா காந்தி என்பவருடன் விமானத்திற்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜான்சன் எனும் சக பயணி வெளியில் வந்ததும் தாக்கினார்” என செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதே செய்தியை திமுகவின் குடும்ப பத்திரிக்கையான தினகரன் “படப்பிடிப்புக்காக சென்றபோது விஜய் சேதுபதியை தாக்க முயற்சி” என வெளியிட்டிருக்கிறது. இந்த இரு தகவல்களும் ஒரே குடும்ப செய்தி நிறுவனங்கள் வெளியிட்டது. ஆனால் செய்திகள் திரித்தே வெளியிடப்படுகிறது.
இதுபோன்ற செய்தி நிறுவனங்கள் திரித்தும் பொய்யாகவும் செய்திகளை கூறுவதால் பத்திரிக்கை அமைப்பின் மீது மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…….உங்கள் பீமா
#vijaysethupathi #banglore #airport #sunnews #dingarannews