6-11-21/ 15.40pm
இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை மாணவர்களின் எதிர்காலம் கருதி ஏற்றுக் கொண்டிருக்க தமிழகம் மட்டும் வேறு திசையில் பயணிக்கிறது. நீட் நுழைவு தேர்வு தடை செய்யப்பட வேண்டும் என போராடுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான மருத்துவ பொறியியல் கல்லூரிகள் பல அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு அரசியல்வாதியும் ஏழை மாணவ மாணவியர் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் இடம் தர மறுக்கின்றனர்.
எத்தனையோ மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாலும் அந்த அரசியல்வாதிகளின் நெஞ்சம் மாறப்போவதில்லை.அதை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை பல காரணங்கள் கூறி தடை செய்ய முற்படுகின்றன.
இந்த அரசியல் தடைகளை தாண்டி பழங்குடியின மாணவி சாதித்துக் காட்டியிருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டம் எம்.நஞ்சப்பனூர் என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் எம்.சங்கவி. நடந்து முடிந்த நீட் நுழைவுத்தேர்வில் 202 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் பழங்குடியின மலசார் சமூகத்தை சேர்ந்தவர். இவரது தாயருக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை. கடந்த வருடம் சங்கவியின் தகப்பனாரும் இறந்துவிட்டார்.அக்கம்பக்கத்தினர் மற்றும் சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டார். தற்போது அந்த மாணவி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
……உங்கள் பீமா