Thursday, June 20, 2024
Home > செய்திகள் > பல்டி அடிக்கும் பாரதிராஜா..! மறத்தமிழனுக்கு வந்த சோதனை..!

பல்டி அடிக்கும் பாரதிராஜா..! மறத்தமிழனுக்கு வந்த சோதனை..!

5-1-22/14.17pm

சென்னை : முன்னாள் பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா படவாய்ப்புகள் குறைந்த பின்னர் திடீரென அவ்வப்போது போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார். இவர் மட்டுமல்ல பல போராளிகளின் நிலைப்பாடுகளும் இதுவாகத்தான் இருக்கும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்த அரசியல் தலைவரால் யாருமோ அல்லது அதை தூண்டிய போராளிகளின் தலைவரோ சம்பவத்தினத்தன்று ஓடி ஒளிந்துகொண்டனர். அதனால் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் மட்டுமே. கூட்டம்கூட்டமாய் வன்முறையில் ஈடுபட்டு பத்திற்கும் மேலான விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது மட்டுமே மிச்சம்.

தொழிற்சாலை மூடப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அந்த போராளிகள் அடுத்த போராட்டத்திற்கு தயாராகிவிட்டனர். ஆனால் இப்போது மக்கள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் மன்றாடி வருகின்றனர். டாஸ்மாக்குக்கு எதிராக குரல்கொடுத்த கோவன் என்பவர் பாவம் என்ன ஆனார் என்று கூகுளில் தேடுவதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

`

இந்நிலையில் திடீர் போராளி பாரதி ராஜா சில நாட்களுக்கு முன்னர் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக கடும் கண்டனக்குரல் எழுப்பியிருந்தார். சமந்தா நடித்த பேமிலி மென் சீரிஸுக்கு தடை கோரியிருந்தார். தனது கண்டனங்களை வலுவாக பதிவு செய்ததோடு கார்ப்பரேட் நிறுவனம் என சாடியிருந்தார்.

```
```

ஆனால் தற்போது அதே அமேசான் நிறுவனத்தின் பொங்கல் விளம்பரத்தில் இந்த திடீர் போராளி நடித்துக்கொடுத்து அனைத்து போராளிகளின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா