கேரளா திருவனந்தபுரத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு விண்வெளி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று ISRO அதிமுக்கியமான விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனங்களை விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டருக்கு அனுப்பி வைத்தது. இதை கொண்டு சென்ற ட்ரைலர் ஒன்றை VSSC லோடுமேன்கள் மடக்கி தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.
பின்னர் அங்கு விரைந்த VSSC உயர் அதிகாரிகள் கம்யூனிஸ்ட் லோடுமேன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கம்யூனிஸ்ட் லோடுமேன்கள் சங்கம் சார்பில் சாதனத்தை இறக்கி வைக்க 10 லட்சம் பேரம் பேசியிருக்கின்றனர். அதிகாரிகள் திகைத்துப்போய் அவ்வளவு கொடுக்க அனுமதியில்லை என கூற, அப்படியெனில் இறக்க யாரும் வரமாட்டார்கள். உங்கள் மெஷின்கள் இந்த வண்டியிலேயேதான் இருக்கும் என மிரட்டும் தொனியில் பேசியிருக்கின்றனர்.
அதன் பின்னர் இஸ்ரோ அதிகாரிகளுடன் கலந்து பேசி கம்யூனிஸ்ட் தொழிற்சங்க லோடுமேன்களுக்கு பத்துலட்சம் கூலி கொடுக்க சம்மதித்திருக்கின்றனர். அதன் பிறகே மெசினை இறக்க கம்யூனிஸ்ட் சங்க தொழிலாளர்கள் உள்ளே சென்றனர்.
இதனால் அந்த இடமே சிலமணிநேரம் பரபரப்புக்கு உள்ளானது. இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ” மற்ற மாநிலங்களை விட கேரளாவில் இறக்கு கூலி அதிகம். ஆளுங்கட்சியே தொழிற்சங்கங்கள் வைத்திருப்பதால் அவர்கள் சொல்லும் கூலியே கொடுக்க வேண்டும். இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க பயப்படுகின்றன. ஏற்கனவே நிறுவனங்களும் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டன.
எங்களைப்போல மாநிலங்களுக்குள் தொழில் செய்வோர் இந்த அதிக இறக்கு கூலியால் அதிக பாதிப்புக்குள்ளாகிறோம். இதனால் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது. விலை அதிகரிப்பால் பாதிக்கப்படுவது மக்களே. இதை கம்யூனிஸ்ட் அரசு கண்டுகொள்ள மறுக்கிறது.” என வருத்தத்துடன் கூறினார்.
..உங்கள் பீமா