Saturday, January 25, 2025
Home > செய்திகள் > தமிழக அரசா இல்லை ஆப்கானிஸ்தான் அரசா? இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேதபிரசாத் கேள்வி..!

தமிழக அரசா இல்லை ஆப்கானிஸ்தான் அரசா? இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேதபிரசாத் கேள்வி..!

நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திமுகவுக்கு நல்ல புத்தியை கொடு என இந்துமுன்னணி சார்பில் பிரார்த்தனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் நாகை மாவட்ட இந்துமுன்னணி வேதாரண்யம் நகரம், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய இந்துமுன்னணி சார்பில் தமிழக அரசின் இந்து விரோத நடவடிக்கைகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா தடை நீக்க கோரியும் தற்போதைய தமிழக அரசிற்கு நற்புத்தி ஏற்படுத்திட கடவுளிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.

அப்போது தனியார் சேனல்களுக்கு பேட்டியளித்த மாவட்ட செயலாளர் வேதபிரசாத் “எங்கள் வீட்டில் வைத்து வழிபட அனுமதி கொடுக்க தமிழக அரசு யார்” என கேள்வி எழுப்பினார். மேலும் “பக்ரீத் உள்ளிட்ட மாற்று மத பண்டிகை காலகட்டத்தில் தொற்றின் தாக்கம் அதிகம் இருந்தது. அப்போதெல்லாம் ஊரடங்கு தளர்வு என கூறி அனுமதியளித்து விட்டு இந்துக்கள் பண்டிகை என்றால் வஞ்சக எண்ணத்துடன் செயல்பட்டு விநாயக சதுர்த்திக்கு திமுக அரசு தடை விதிக்கிறது.” என கூறினார்.

```
```
`

இந்த நிகழ்வின்போது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேதபிரசாத் தலைமையில் மாவட்ட செயலாளர் அருனகிரி ,நகரத்துணைத் தலைவர்கள் அண்ணா ஜி.அன்ஸ் ,ஆட்டோ ராஜா, வடக்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் மற்றும் இந்து இளைஞர் முன்னணி நகரத் தலைவர் தமிழ்வேந்தன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.