செகந்திராபாத்தில் அமைந்துள்ளது சிடிஎம் என அழைக்கப்படும் காலேஜ் ஆப் டிபென்ஸ் மேனேஜ்மேனேட். இங்கு ராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு மேலாண்மைக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த சிடிஎம் கல்லூரியால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவின் வரலாற்றை பெருமமய போர்தந்திரத்தை எடுத்து சொல்லும் அர்த்தசாஸ்திரம் மற்றும் பகவத் கீதை போன்ற இந்துக்களின் புனித நூல்களில் உள்ள போர் யுக்திகளை பாடத்திட்டத்தில் இணைக்க பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய இந்திய கலாசார ஆய்வு மன்றம் மற்றும் ஒரு தனிப்பட்ட பேராசிரியரை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய ஆயுதப்படைகளில் மூலோபாய சிந்தனை மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டைய இந்திய நூல்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் ராணுவத்தில் சிறந்த யுக்தியை செயல்படுத்த உதவும் எனவும் இது ராஜதந்திரம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மனுஸ்மிருதி மஹாபாரதம் உள்ளிட்ட இந்துக்களின் புனித நூல்களும் விரைவில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
…உங்கள் பீமா