Monday, January 30, 2023
Home > செய்திகள் > போலி எஸ்.சி சான்றிதழ்..! சிக்கும் அரசு அதிகாரிகள்..?

போலி எஸ்.சி சான்றிதழ்..! சிக்கும் அரசு அதிகாரிகள்..?

30-3-22/15.48PM

சென்னை : பட்டியலினத்தோர் அல்லாதவர்க்கு எஸ்.சி சான்றிதழ் வழங்கி முறைகேடு நடப்பதாக குறவர் சமுதாய மக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். மேலும் பல அதிகாரிகள் பெயரையும் பட்டியலிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில ஹிந்து குறவர் சமுதாய கமிட்டியின் தலைவர் எஸ்.தங்கவேலு “தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி புளியங்குடி பாலசுப்ரமணியன் ஆகியோர் மீது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்துள்ளோம்.

பச்சைக்காரர் கங்கைக்காரர் சமுதாயத்தை சேர்ந்த 67பேர் எங்கள் குறவர் சமுதாயத்தை குறிப்பிட்டு போலியான சான்றிதழ் வாங்கியுள்ளனர். இதற்க்கு ஆதாரம் இருக்கிறது. கிராம நிர்வாக அதிகாரி அவர்களிடம் ஆவணங்களை வாங்கிக்கொண்டு சான்றிதழ் வழங்கியிருக்கிறார். தமிழகம் முழுவதும் இதே போல பல இடங்களில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

`

நாங்கள் பலமுறை அரசிடம் மனு அளித்துவிட்டோம். இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் இந்தவிஷயத்தில் தலையிட்டு காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இதன்மூலம் பட்டியலினத்தவருக்கு கிடைக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டறிந்து தடுக்கலாம். இடஒதுக்கீடு கொள்கையில் குளறுபடி நடக்கவிடாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என கூறினார்.

மேலும் திருமணம் செய்யாமலேயே திருமண சான்றிதழ் வழங்கி அந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இதுபோல போலி சான்றிதழ் வழங்கப்படுவதை தடுக்கவேண்டியது அரசின் கடமை என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா