Friday, September 22, 2023
Home > அரசியல் > நகராட்சி ஆணையரை ஆபாசமாக திட்டிய முன்னாள் எம்.எல்.ஏ..! வைரலாகும் வீடியோ..!

நகராட்சி ஆணையரை ஆபாசமாக திட்டிய முன்னாள் எம்.எல்.ஏ..! வைரலாகும் வீடியோ..!

சமாஜ்வாடி அகிலேஷ்யாதவ் தன்னுடைய கட்சியில் ரவுடிகளையும் குண்டர்களையுமே இணைத்துக் கொள்கிறார் என சமீபத்தில் மாயாவதி உட்பட பலர் புகார் தெரிவித்தனர். அதை நிரூபிப்பது போல கோரக்பூர் ஊரக சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ.வும் சமாஜ்வாதி தலைவருமான விஜய் பகதூர் யாதவ் நடந்து கொண்டுள்ளார்.

கோரக்பூர் க்ரீன் சிட்டியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நீர் வெள்ளம் போல தேங்கி மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள். உடனடியாக காலத்தில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் மின் மோட்டார் பம்ப்செட்டுகளை கொண்டு நீரை வெளியேற்றி வந்தது.

இந்நிலையில் இதை பார்வையிட சென்ற முன்னாள் எம் எல் ஏ விஜய் பகதூர், அங்கு பொருத்தப்பட்டிருந்த மோட்டார்களில் ஒன்று பழுதாயிருப்பதை கண்டு கோபம் கொண்டு,”நகராட்சி ஆணையர் யாரென்று சொல்லுங்கள். அவர் கழுத்தை நெரிக்கிறோம்.” என்று கூறி மேலும் பல ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.

`

அந்நேரத்தில் அங்கு வந்த ஆணையர் பிரேம் விஜய் பகதூரிடம் புதிய மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருப்பதை எடுத்துக்கூறினார். மேலும் ரோஹின் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இங்கு பாதிப்புகள் வரலாம் என்ற அச்சம் வீண் வதந்தி என்பதையும் தெளிவாக எடுத்து கூறினார்.

அங்கிருந்த சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூகதளத்தில் வெளியிட்டனர். விஜய் பகதூரின் ஆபாச பேச்சு மக்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது. “குறை கூற வேண்டும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தவேண்டும் என்ற நோக்கிலேயே சமாஜ்வாடி தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்” என கோரக்பூர் பிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா

image credit; jagran