Monday, March 27, 2023
Home > செய்திகள் > விநாயகர் சதுர்த்தியை முடக்க சதியா..!! வெளிவந்த ஆதாரங்கள்..!

விநாயகர் சதுர்த்தியை முடக்க சதியா..!! வெளிவந்த ஆதாரங்கள்..!

டாஸ்மாக் தியேட்டர் கேளிக்கை பூங்கா உட்பட பல இடங்களில் மக்கள் கூட அனுமதித்த திமுக அரசு இந்துக்கள் பண்டிகையை உள்நோக்கத்துடன் தடை செய்கிறது என எதிர்க்கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தடையை மீறி கண்டிப்பாக விநாயகர் ஊர்வலம் நடக்கும் என தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சிலை செய்து பிழைக்கும் கூலித்தொழிலாளர்களை கைது செய்து உணவின்றி அடைத்து வைத்தது திமுக அரசு.

நேற்று முதல் அடுத்த கட்ட பேரிடியாக சிலை செய்து வைத்திருக்கும் சிலை கூடத்திற்க்கே சென்று சிலைகளை கைப்பற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக சென்னை தாம்பரத்தை சேர்ந்த காவல் அதிகாரி சார்லஸ் என்பவர், ஒரு ஏழை தொழிலாளி தனது வீட்டில் விற்பனைக்காக செய்து வைத்திருந்த விநாயகர் சிலைகளை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் தூக்கி சென்றார்.

`

அனைத்து சிலைகளையும் காவல்துறையினர் எடுத்து செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதை இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

…உங்கள் பீமா