மஹாராஷ்டிராவில் காங்கிரசுடன் இணைந்து சிவசேனா பதவி ஏற்ற நாளிலிருந்து அடிதடி ரவுடியிசம் கொலை கொள்ளை கற்பழிப்பு என குற்றங்கள் பெருகிவருவதாக மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மும்பை சாக்கினாகா பகுதியில் 32 வயதான பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதைக்கண்டு அலறிய சிலர் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அந்த பெண்ணை மீட்டு காட்கோபர் பகுதியில் உள்ள ராஜவாடி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் டிசிபி மற்றும் இணை ஆணையர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் இதுகுறித்து “அதிகாலை 3.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் சாக்கினாகா ஹைராணி சாலையில் என இடத்தையும் தெரிவித்தனர். அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துளோம்.
அந்த பெண்ணை இரும்பு கம்பி கொண்டு தாக்கி பின்னர் கற்பழித்து அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பிற்குள் இரும்பு கம்பியை செலுத்தியுள்ளனர். கற்பழிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக தெரிகிறது. அதில் ஒருவனை கைது செய்துள்ளோம்.
குற்றவாளி மீது ஐபிசி 376 (கற்பழிப்பு குற்றம்) 307 (கொலை முயற்சி) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கற்பழிப்பில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணியில் ஒரு குழு இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளது. அவசர சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சை நடைபெறுகிறது” என தெரிவித்தது.
உள்ளூர்வாசி ஒருவர் தெரிவிக்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த சில உள்ளூர் பிரமுகர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என கூறினார். அதிகாரபூர்வமற்ற தகவலும் இதையே கூறுகிறது.
…உங்கள் பீமா