6-5-22/8.42AM
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் முகம் சிதைக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் ஒரு இளைஞர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் நாகராஜு (25) மற்றும் செய்யது அஷ்ரின் சுல்தானா இருவரும் பாலிய நண்பர்கள்.இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நாகராஜு ஒரு கார் விறபனையாளர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவர் குடும்பத்தினரிடையே இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை இரவு 8.45 அளவில் தம்பதியினர் தங்களது வீட்டிலிருந்து இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கும்பல் நாகராஜை இழுத்துச்சென்று இரும்புக்கம்பிகளால் தாக்கினர். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் பலமுறை குத்தியுள்ளனர். அதோடு நில்லாமல் இரும்புக்கம்பியால் முகத்தை அடித்தே சிதைத்துள்ளனர்.

சம்பவத்தை பார்த்த மக்கள் ஓடிவருகையில் கொலைகாரகும்பல் தப்பியோடியது. மேலும் அந்த சம்பவத்தை அருகிலிருந்த சிலர் தங்களது மொபைலில் படம்பிடித்துள்ளனர். சுல்தானா அந்த கும்பலில் தனது சகோதரர் இருந்ததை அடையாளம் காட்டினார். நாகராஜை சுல்தானா குடும்பத்தினர் மதம் மாற வற்புறுத்த அவர் மறுத்திருக்கிறார்.
இதன்காரணமாக கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு சுல்தானா தனது பெயரை பல்லவி என மாற்றிக்கொண்டார். ஆர்யசமாஜத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு சுல்தானா குடும்பத்தினர் நாகராஜை தொடர்ந்து மிரட்டி வந்ததாக சுல்தானா தெரிவித்துள்ளார். நாகராஜ் படுகொலையினால் ஹைதராபாத் சரூர் நகரில் பதட்டம் அதிகரித்துள்ளது.
…..உங்கள் பீமா