Sunday, December 3, 2023
Home > செய்திகள் > சென்னையில் பரபரப்பு..! ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்கள்..!

சென்னையில் பரபரப்பு..! ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்கள்..!

25-11-21/12.40pm

சென்னை : தாம்பரத்தில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிவந்தபோது பிடிபட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது.

தமிழகத்தில் அடுத்தடுத்து இரு காவலர்கள் கொல்லப்பட்ட நிலையில் தமிழக காவல்துறை மாநிலமெங்கும் தீவிர கண்காணிப்பில் இறங்கியது. காவல்துறை உயரதிகாரி சைலேந்திர பாபு இரவுநேரம் ரோந்து செல்லும் காவலர்கள் ஆறு குண்டுகளுடன் துப்பாக்கியை கொண்டுசெல்ல வேண்டும் என கட்டளையிட்டார்.

மேலும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் கட்டளையிட்டிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த இருநாட்களாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

`

இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் நேற்று இரவிலிருந்து நடத்தப்பட்ட வாகன சோதனையில் இன்று அதிகாலை இளைஞர்கள் சிலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. அதையடுத்து காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். அதில் ஒரு இளைஞர் ஒண்ணரை அடி நீளமுள்ள அரிவாள் ஒன்றை இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்தது காவலர்களால் கைப்பற்றப்பட்டது.

```
```

இதையடுத்து அவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்கில் தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.

…..உங்கள் பீமா