உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ஜனநாயகம் பெருமை மிகுந்தது. இங்கு பிரதமர் உட்பட யாரை வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம். தீவிரவாத குழுக்களுக்கு தாராளவாதிகள் என்ற போர்வையில் ஆதரவாக பேசலாம். தீவிரவாதிகளுக்கு அஞ்சலியும் செலுத்தலாம்.
முக்கியமாக இந்துக்கள் கலாச்சாரத்தையும் அவர்களின் நம்பிக்கையும் சீண்டிப்பார்க்கலாம். சேற்றைவாரி இறைக்கலாம். இந்தியாவின் பண்பாட்டை குறைகூறலாம். எல்லாவற்றிற்கும் இங்கு சுதந்திரம் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஆளும் சீனாவில் தலைகீழ்.
அரசுக்கு எதிராக ஒரு பதிவு இணையத்தில் தென்பட்டால் அந்த லிபெரல்ஸின் பாடு அதோகதிதான். கடந்த வியாழக்கிழமை (2-9-21) சீன அதிபர் ஜின்பிங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி ரியாலிட்டி ஷோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உட்பட அனைத்திலும் பெண்கள் போல நடந்து கொள்ளும் ஆண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைக்காட்சியில் பணிபுரியும் நடிகர்கள் நடிகைகள் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோரின் சம்பளம் அதிகமாக இருப்பதால் அதை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். சீன தொலைக்காட்சியில் சீன கலாச்சாரம், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட நிகழ்ச்சிகளே அதிகம் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த அறிவிப்பின் படி திருநங்கையர் இனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற நேற்றிலிருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.