ஆகஸ்ட் 16 அன்று டெல்லி உச்சநீதிமன்ற வாயிலில் ஒரு பெண் மற்றும் அவரது உறவினர் இருவரும் தீக்குளித்து இறந்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதையடுத்து ஆகஸ்ட் 27 முன்னாள் போலீஸ் ஐஜி அமிதாப் தாக்கூரை லக்னோவில் காவல்துறை கைதுசெய்தது.
இறந்த பெண் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பி ராய் என்பவரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கு இந்த அமிதாப் தாகூரிடம் வந்தபோது கட்சித்தலைவருக்கு சாதகமாக செயல்பட்டு வழக்கை திசைதிருப்பியதாக தெரிகிறது. அதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிகார சேனை எனும் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது இறந்த பெண் வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அமிதாப் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும்போது சிறுகுழந்தை போல வண்டியில் ஏற்கமாட்டேன் என அடம்பிடித்தும் ஜீப்பின் மேல் கம்பியை பிடித்து தொங்கியும் அடம்பிடித்தார். இதை ஒரு சிலர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இந்த அமிதாப் தாகூர் யோகியை எதிர்த்து போட்டிபோடுவேன் அவரை வெல்ல விடமாட்டேன் என சிலநாட்களுக்கு முன் சபதம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அகிலேஷ் யாதவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு அரசியல் பழிவாங்கல் என அமிதாப் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். காவல்துறை தரப்பில் “ஹசரத்கஞ்ச் காவல் நிலையத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தாக்கூர் மற்றும் அதுல் ராய் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என கூறப்படுகிறது.
அமிதாப் தாக்கூர் மீது பிரிவு 120-பி (குற்றச் சதி), 167 (காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான ஆவணத்தை உருவாக்கும் பொது ஊழியர்), 195-ஏ (பொய்யான சான்று கொடுப்பதாக யாரையும் அச்சுறுத்தல்), 218 (பொதுப் பணியாளர் தவறான பதிவை உருவாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
அல்லது தண்டனையிலிருந்து நபரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் எழுதுதல்), 306 (தற்கொலைக்கு ஊக்கமளித்தல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல் குற்றம்). ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
…உங்கள் பீமா