Wednesday, March 19, 2025
Home > அரசியல் > கரூரில் காவல் துறை அட்டூழியம்..!வீடியோ வெளியிட்ட பிஜேபி தலைவர் கே.அண்ணாமலை..!

கரூரில் காவல் துறை அட்டூழியம்..!வீடியோ வெளியிட்ட பிஜேபி தலைவர் கே.அண்ணாமலை..!

முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விநாயக சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதித்ததையடுத்து தமிழகமெங்கும் இந்து அமைப்பினர் சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோட்டோர வியாபாரிகள் வைத்திருந்த விநாயகர் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர்.

https://twitter.com/KaruNagarajan1/status/1435834685964230662?s=20


மேலும் தமிழகம் முழுக்க சாலையோர வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருக்கும் விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

`

தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல..இளைஞர்களே இதை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்’- டாக்டர் கலைஞர் அவர்கள் பேசியது 23.06.99 அன்று முரசொலி நாளிதழில் படத்துடன் முத்தமிழ் அறிஞரின் புதல்வருக்கு, தமிழக முதல்வருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.” என பதிவிட்டு முதல்வருக்கு கடிதம் எழுதும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

```
```

..உங்கள் பீமா

pic credit. hindu