Sunday, December 3, 2023
Home > அரசியல் > விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்பி நீதிமன்றத்தில் பல்டி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்பி நீதிமன்றத்தில் பல்டி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் ரவிக்குமார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் நடந்த மக்களவை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு கட்சியின் உறுப்பினர் மாற்றுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது குற்றமாகும். மேலும் அப்படி மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றவரின் பதவியும் பறிக்கப்படும்.

`

ரவிக்குமாரின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரவிகுமாரிடம் நீங்கள் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவரா இல்லை திமுகவை சேர்ந்தவரா என கேள்வி எழுப்பப்பட்டது.

```
```

இதற்க்கு பதிலளித்த ரவிக்குமார் எம்பி “நான் திமுகவை சேர்ந்தவன். அதனாலேயே உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன்.” என கூறினார். மேலும் தான் திமுகவை சார்ந்தவன் என்றும் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்திருக்கிறார்.

இவர் மட்டுமல்லாமல் பாரிவேந்தர் சின்னராஜ் கணேசமூர்த்தி ஆகிய எம்பிக்களும் தாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என கூறி உறுதிமொழி பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.