கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் இந்து சாதுவின் படத்தை போட்டு முறையற்ற உறவு என செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த கட்டுரையை படித்தால் அதில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும் இந்து சாதுவின் படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புல்தானா மாவட்டத்தில் வடசிக்கும் போலி மதகுருவான ஆசிப் நூரி என்பவன் தன்னை சந்திக்க வரும் ஆண் பக்தர்களை முறையற்ற பாலியல் உறவுக்கு அளித்திருக்கிறான். இந்த செய்திக்கு தொடர்பில்லாத ஒரு இந்து சாதுவின் படத்தை போட்டிருக்கிறார் இஸ்லாமிய நிருபர்.
இதையறிந்து மும்பை நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் தூபே என்பவர் TOI ஐ தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஊடகங்களில் எந்த பாலியல் செய்தியாக இருந்தாலும் இந்து சாதுக்களின் புகைப்படத்தை போட்டு இந்துக்களின் மீது காழ்ப்புணர்ச்சியை காண்பிப்பது ஊடகங்களின் வாடிக்கையாகிவிட்டது.
நியூயார்க் டைம்ஸ் எனும் பத்திரிக்கை இந்துக்களின் மீதும் இந்தியாவின் மீதும் தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. “தாலிபான்கள் அரசு அமைப்பதை குறிப்பிட்ட NY தாலிபான்கள் உறுதியான ஆளுமைகளை வைத்து உறுதியான ஆட்சியை தர போகிறது” என செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இதே நியூயார்க் டைம்ஸ் மோடி அவர்கள் ஆட்சி கட்டிலில் ஏறியபோது, “ஆபத்தான இந்துத்வ தீவிரவாதிகளை மோடி புகழ்கிறார்.” என குறிப்பிட்டுள்ளது. நடுநிலையாய் நடந்து கொள்ள வேண்டிய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து மக்களிடம் தவறான செய்திகளையே கொண்டு சேர்க்கிறது என நடுநிலையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
..உங்கள் பீமா