Saturday, October 5, 2024
Home > அரசியல் > திமுக அமைச்சரை விரட்டியடித்த மக்கள்..! முதல்வர் முக ஸ்டாலின் விசிட்டின் பின்னணி..!

திமுக அமைச்சரை விரட்டியடித்த மக்கள்..! முதல்வர் முக ஸ்டாலின் விசிட்டின் பின்னணி..!

3-12-21/16.12pm

தூத்துக்குடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்ற திமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். அதன்பின்னரே முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் கன்னியாகுமரி தூத்துக்குடி திருச்செந்தூர் சென்னை உட்பட பல நகரங்கள் பெருத்த சேதமடைந்தன. திமுகவின் கோட்டையான சென்னை வெள்ளத்தால் மூழ்கிய போதும் பல திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் சொந்த தொகுதிக்கு கூட செல்லவில்லை என பொதுமக்கள் விமர்சித்துவருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் திமுக அமைச்சர்களிடம் கோரிக்கை எழுப்பியபோது சில அமைச்சர்கள் தள்ளியும் முறைத்தும் மிரட்டியும் விட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றது. மேலும் முதல்வரின் தொகுதியான குளத்தூரில் ஐம்பது ரூபாய் கொடுத்து படகில் சவாரி செல்லுமளவிற்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

`

முதல்வரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் பார்வையிட்டு சேதமான இடம் சரிசெய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அதே இடத்தை இரண்டு நாட்கள் கழித்து புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பார்வையிட்டு அந்த இடத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சென்ற அமைச்சர் கீதா ஜீவனை பொதுமக்கள் உள்ளே விடாமல் துரத்தினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வரவில்லை. நீர் வற்றியதும் ஏன் வருகிறீர்கள் என பொதுமக்கள் கேட்டதாக தெரிகிறது. அதையடுத்து கீதா ஜீவன் திரும்பி சென்றார்.

```
```

இதன்பிறகே முதல்வர் ஸ்டாலின் அவசரம் அவசரமாக தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றதாக கூறப்படுகிறது. கனிமொழி கீதா ஜீவன் போன்றோர் தூத்துக்குடி தொகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி செல்வாக்கு மிகுந்த பகுதி என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

….உங்கள் பீமா