Saturday, July 27, 2024
Home > செய்திகள் > தடை அதை உடை…! சாதித்தது காட்டிய தென்காசி மக்கள்..!

தடை அதை உடை…! சாதித்தது காட்டிய தென்காசி மக்கள்..!

திமுக தலைமையிலான தமிழக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது மட்டுமன்றி புளியங்குடி கரூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை காவல் துறை மூலம் உடைத்தும் பறிமுதல் செய்தும் பாசிசத்தின் உச்சிக்கே செல்கிறது என இந்து அமைப்பினர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

அதற்க்கு ஆதாரங்களாக சில வீடியோக்களும் வெளிவந்தன. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தடையை மீறி விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுமென அறிவித்தனர். அதனால் இன்று தமிழகம் முழுக்க கோவில்களின் அருகே பக்தர்கள் திரள் திரளாக கூட தொடங்கினர்.

`

கடந்த முறை ஊருக்குள் விநாயக ஊர்வலத்தை அனுமதிக்கமாட்டோம் என கூறி கல்லெறிந்து கலவரத்திற்கு முற்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் இன்று விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றது. அதிலும் குறிப்பாக தென்காசியில் காவிக்கொடியோடு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தென்காசி பெரிய கோவில் முன் திரண்டனர்.

```
```

தமிழகமெங்கும் நடைபெற்று வரும் இந்த கொண்டாட்டங்களை பார்க்கும்போது தமிழகத்தை யார் ஆண்டாலும் இந்த பூமி ஆன்மிக பூமி என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. இந்தியா மட்டுமல்ல ஆப்பிரிக்கா நியூயார்க் ஆஸ்திரேலியா ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் கூட இன்று விநாயக சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

..உங்கள் பீமா