Thursday, March 28, 2024
Home > செய்திகள் > இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்..! தமிழ்நாட்டில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி..!!

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்..! தமிழ்நாட்டில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி..!!

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உணவுப்பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதன் அந்நிய செலாவணி கையிருப்பு அதல பாதாளத்தில் இருப்பதால் சீனாவுக்கு இந்த வருடம் கட்ட வேண்டிய வட்டி தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கையை பிசைந்து வருகிறது. ஏற்கனவே இலங்கையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நிலையில் சீனாவின் கோரப்பிடி இலங்கையை இறுக்கி வருகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பெருகுமெனில் அது இந்தியாவுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும் என சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்கள் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

`

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதியை நேற்று (9 செப் 2021) தொடங்கி வைத்துப் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்று தெரிவித்தார்.

மேலும் கட்கரி கூறுகையில் “சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

```
```

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனி நமது தேசிய நெடுஞ்சாலைகளை ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும்.” என தெரிவித்தார்.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைவர் திரு ஆர் எஸ் பதௌரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

…..உங்கள் பீமா