தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவீந்திர நாராயண் ரவி அவர்கள் கேரளாவில் ஐபிஎஸ் ஆக தனது பயணத்தை தொடங்கினார். அவரது கடின உழைப்பாலும் தேசத்தின் மீது கொண்ட அபரிமிதமான பற்றாலும் உளவுத்துறை பிரிவின் தலைவரானார். அவரது கடன் உழைப்பு அடுத்ததடுத்த கட்டங்களுக்கு அவரை உயர்த்தியது.
நாகலாந்தில் கவர்னரானபோது அங்கு நிலவிய அசாதாரண சூழலை தனது புத்தி கூர்மையாலும் சாதுர்யத்தாலும் கையாண்டு அமைதி நிலவ செய்தார். தற்போது அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி ” முழுக்க முழுக்க போலீஸ் பின்புலத்தை கொண்ட ஒருவரை தமிழக கவர்னராக நியமித்திருப்பது முக ஸ்டாலின் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தவே என சந்தேகம் எழுகிறது. தமிழக அரசியலை சீர்குலைக்கவும், தமிழகத்தில் பிஜேபியை வளர்த்தெடுக்கவுமே ரவீந்திர நாராயண் ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆளுநர் நியமனம் உள்நோக்கம் கொண்டது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.” என கூறினார். ஆளுநர் நியமனத்துக்கு அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பதற்கும் என்ன தொடர்பு என்பதை அழகிரி விளக்க மறுத்துவிட்டார். நியமனத்தின்போதே எதிர்க்கட்சிகள் இப்படி பழி போட ஆரம்பித்துவிட்டால் இன்னும் அவர் ராஜ் பவனில் நுழைந்தால் என்னென்ன கதறுவார்களோ என பிஜேபியினர் கிண்டலடித்து வருகின்றனர்.
…உங்கள் பீமா