Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > தமிழனின் கலாச்சாரத்தை நீதிமன்றம் உணருமா..! பலநூறு வருடம் முன்னரே பட்டாசு வெடித்தவர் போகர்..! இதோ ஆதாரம்..!

தமிழனின் கலாச்சாரத்தை நீதிமன்றம் உணருமா..! பலநூறு வருடம் முன்னரே பட்டாசு வெடித்தவர் போகர்..! இதோ ஆதாரம்..!

4-11-21/7.05am

நீதிமன்றங்களோ அரசியல் அமைப்பு சாசனங்களோ தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் குறித்த புரிதல் இன்றி செயல்படுவதாக பரவலாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றம் பட்டாசு வெடிப்பது சமீபத்திய காலத்தில் தான் இடைச்செருகலாக ஏற்பட்டது என புது விளக்கம் கூறியிருக்கிறது.

ஆனால் பட்டாசு வெடிப்பது பண்டைய காலத்திலிருந்தே தமிழனின் கலாச்சாரத்தில் ஒன்றிப்போயிருக்கிறது. தமிழர்கள் இந்துக்களே. இந்துக்குள் மட்டுமே தமிழர்கள் என்பது பேசுபொருளாயிருக்கிற இந்த சமூகத்தில் பண்டைய கால் நடைமுறைகள் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை சீரழிக்க ஒரு கும்பலே சுற்றிக்கொண்டிருக்கிறது.

மாமுனிவரான போகர் தனது சப்தகாண்டம் எனும் நூலில் பட்டாசு செய்வது குறித்த விளக்கத்தை 415-418ம் பக்கங்களில் விளக்கியிருக்கிறார். 5-7ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் தமிழர்களின் முன்னோடியாக கருதப்படும் முனிவர் போகர் பட்டாசு செய்முறை பற்றி விளக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.

`

வெடியுப்பு செயநீர் என்று குறிப்பிட்டு நாம் இன்று பெயரிட்ட பேரியம் நைட்ரேட் சல்பர் உள்ளிட்டவற்றை அழகான தமிழில் பெயரிட்டு அழைத்திருக்கிறார்.

மேலும் திருவாரூரில் உள்ள தியாகராஜர் திருக்கோவிலில் 700 வருடங்களுக்கு முன்னரே தீபாவளி அன்று தமிழர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஓவியங்கள் காணப்படுகின்றன. நீதிமன்றங்களுக்கு இதைவிட வேறெதுவும் ஆதாரம் தேவையா என நடுநிலையாளர்கள் கேள்விக்கணைகளை தொடுக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை கருத்துரிமை அவரவர் மத வழிபாடு உரிமை மேலும் மதம் சார்ந்த நம்பிக்கைளை பின்தொடர்தல் போன்றவற்றிற்கு பொதுமக்களுக்கு சுதந்திரம் வழங்கியிருக்கிறது. ஆனால் தமிழர் பண்பாட்டை சுற்றுசூழல் எனும்பெயரில் தடைசெய்வது தமிழ்மக்களை வேதனைக்குள்ளாகியிருக்கிறது.

```
```

வாகனங்கள் ஏற்படுத்தாத மாசையோ விமானங்கள் பாலிதீன் ஏற்படுத்தாத மாசையோ இரண்டு நாட்கள் வெடிக்கும் பட்டாசுகள் ஏற்படுத்த போவதில்லை என பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர்.

……..உங்கள் பீமா

#crackersban #highcourt #bogar #thamilartradition