Thursday, March 28, 2024
Home > செய்திகள் > இறைச்சிக்கடைகளுக்கு தடை..! மேயர் அதிரடி உத்தரவு

இறைச்சிக்கடைகளுக்கு தடை..! மேயர் அதிரடி உத்தரவு

5-4-22/13.44PM

புதுதில்லி : நவராத்திரி கொண்டாட்டங்களை முன்னிட்டு இறைச்சிக்கடைகள் கண்டிப்பாக மூடப்படும் என தெற்கு டில்லி மேயர் தெரிவித்துள்ளார். மேலும் அரேபியநாடுகளில் ரமலான் மாதத்தில் பொதுவெளிகளில் தண்ணீர் குடிக்க தடை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்கு டில்லி மேயராக இருப்பவர் முகேஷ் சூர்யன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தற்போது பேட்டியளித்துள்ளார். ஹிந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு ஏப்ரல் 8,9 மற்றும் 10 திங்கட்கிழமை வரை இறைச்சிக்கடைகளுக்கு தடை பிறப்பிக்கப்படும் என கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில்,

“நாங்கள் அனைத்து இறைச்சிக்கடைகளையும் மூடுவோம். இறைச்சி விற்கப்படாவிட்டால் மக்கள் அதை சாப்பிடமாட்டார்கள். சில இஸ்லாமிய நாடுகளில் ரமலான் நோன்பு மாதத்தில் பொது இடங்களில் நீர் அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு உத்தரவே இது. டில்லி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது. மக்கள் இதுகுறித்து புகாரளித்துள்ளனர்.

`

திறந்தவெளியில் இறைச்சிவெட்டுவதால் ஏற்படும் விளவுகளை தடுக்க உண்ணாவிரதம் மேற்கொண்ட மக்கள் இதை எடுத்துக்கூறினர். இந்த உத்தரவு யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்தையும் மீறவில்லை.இறைச்சி தடை உத்தரவை நாங்கள் பின்பற்றுவோம். துர்க்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நவராத்திரி நாட்களில் இறைச்சிக்கடை மூடப்படவேண்டும்.

இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் இறைச்சி மற்றும் சில மசாலாப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

```
```

….உங்கள் பீமா

#meatshop #ban #navaratri #delhi