“திரைப்படங்களில் இந்து மத துறவிகளை தவறாகவும் இந்துமத அடையாளங்களை கொண்டிருப்பவர் வில்லனாகவும் திரைப்படங்களில் காண்பிக்கும்போது அதை ஒரு திரைப்படமாக பார்க்க வேண்டும் என தாராள வாதிகள் குரல் கொடுப்பார்கள். அதையே மாற்று மதத்தினரை காண்பித்தால் சிறுபான்மையினரை அவமதிக்கிறார்கள். அவர்களை துன்புறுத்துகிறார்கள் என ஒரு கூட்டம் குரல் எழுப்பும்” என இந்து அமைப்பினர் பல காலமாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வினோத் திவாரி என்பவரது இயக்கத்தில் வெளியாக உள்ள ஹிந்தி திரைப்படம் தி கன்வெர்சன். இயக திரைப்படம் லவ் ஜிஹாத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நேற்று சென்சார் போர்டு தணிக்கைக்கு சென்றது.
அந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் இந்த திரைப்படம் வெளியாவது கஷ்டம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தணிக்கை குழு சேர்மன் பிரசூன் ஜோஷி ” இந்த திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் சமூகத்தில் வன்முறை நிகழ வாய்ப்பிருக்கிறது” என கூறியதாக தெரிகிறது.
…..உங்கள் பீமா
#theconversion #hindifilm #lovejihad