4-11-21 / 13.35pm
போதும்டா சாமி என ரசிகர்கள் தலையில் கைவைத்ததாக செய்திகள் இணையத்தில் தீயாய் பரவுகிறது. அண்ணாத்த திரைப்படம் இன்று வெளியானதை தொடர்ந்து பல ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சில அரசியல்வாதிகள் உட்பட பலர் தியேட்டருக்கு படையெடுத்தனர்.
ஆனால் ரஜினி நடித்த திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை என கூறப்படுகிறது. டைரக்டர் மோகன் G சத்ரியன் குறிப்பிடுகையில் “இது தலைவருக்காக மட்டும்தான்” என கூறி மறைமுகமாக படம் மோசம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் கூட்டணிக்கட்சி தோழரான அருணன் மனம்திறந்து படுமோசமாக இருப்பதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் சில தியேட்டர்களில் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. அதிலும் ஒரு தியேட்டரில் ரசிகர் ஒருவர் படம் முடிந்த பின்னரும் தூங்கிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் பலர் ரஜினியின் தீபாவளி பரிசு சுமார் என விமர்சித்து வருகின்றனர். இதனால் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸும் பட விநியோக உரிமையை கொண்டிருக்கும் உதயநிதியும் கையை பிசைந்து கொண்டிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.
மேலும் இந்த படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி படத்தின் தழுவல் என விஜய் ரசிகர்கள் குரல்கொடுத்துவருகின்றனர்.
…….உங்கள் பீமா
#annathe #deepavali #rajinikanth