23-2-22/13.10pm
கேரளா: பிரபல மலையாள நடிகையான கே.பி.ஏ.சி.லலிதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 73. லலிதாவின் இயற்பெயர் மகேஸ்வரி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.


மகேஸ்வரி அம்மாள் கே.பி.ஏ.சி எனப்படும் நாடக கம்பெனியில்(இடதுசாரி மக்கள் கலை கழகம்) தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். 1969களில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கூட்டுக்குடும்பம் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் தமிழில் நடித்த காதலுக்கு மரியாதை என்கிற படம் நற்பெயரை பெற்றுத்தந்தது.

இவர் பிரபல டைரக்டரான பரதன் என்பவரை மணம்புரிந்தார். அவர் சில வருடங்களுக்கு முன் இறந்தார்.

இவர்களுக்கு சித்தார்த் எனும் மகன் உள்ளார். அவர் மலையாள நடிகராகவும் இயக்குனராகவும் உள்ளார். இவரது நடிப்பில் மணிச்சித்ரத்தாழ் பெரிதும் பேசப்பட்டது. அம்மா, மனைவி,தங்கை,பாட்டி என பன்முகத்திறமையோடு வலம்வந்தார்.


1900ல் வெளிவந்த அமரம் மற்றும் 2000த்தில் வெளிவந்த சாந்தம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகைக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் சமீபகாலம்வரை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அவர் கடந்த டிசம்பரில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.

நேற்று கொச்சியில் அவரது உயிர்பிரிந்தது. இன்று அன்னாரது இறுதியஞ்சலி வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது. மலையாள முன்னணி நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

…..உங்கள் பீமா