உத்திரபிரதேசம் லக்னோ சடாட்கஞ்ச் தம்பக்கூ மாண்டிபகுதியை சேர்ந்தவன் அன்வர். இவன் மீது 17க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் ஆள் நடமாட்டம் மிகுந்த சடாட்கஞ்ச் கேம்பல் ரோட்டில் ஒரு கடையில் நின்று சமோசா சாப்பிட்டு கொண்டிருந்தான்.
அபோது அங்கு வந்த இன்னொரு இளைஞன் அன்வருடன் தகராறில் ஈடுபட்டான். திடீரென மறைத்து வைத்திருந்த A 315 ரக பிஸ்டலை எடுத்து சராமாரியாக சுட்டதில் அன்வர் சம்பவ இடத்திலேயே பலியானான். துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு அவுட் போஸ்டில் பணியிலிருந்த கார்த்திக் எனும் காவலர் சுட்டவனை தப்பிக்கவிடாமல் பாய்ந்து பிடித்தார்.
விசாரணையில் சுட்டவன் பெயர் தாரிக் என தெரியவந்துள்ளது. இறந்தவன் சலீம்-ருஸ்டம்-சொஹ்ராப் சீரியல் கில்லர் கும்பலை சேர்ந்தவன் என்றும் அவர்கள் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அன்வருக்கும் தாரிக்கிற்கும் நிலம் தொடர்பாகவும் தொழில் போட்டி காரணமாகவும் முன்பகை இருந்ததாக சொல்லப்படுகிறது.
போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூடு மக்களிடையே பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த கிரிமினல் குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளவேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
….உங்கள் பீமா