8-2-22/15.50pm
டெல்லி : கடந்த பிப்ரவரி 5 அன்று பாகிஸ்தானின் ஹூண்டாய் கிளை நிறுவனம் ஒரு ட்வீட் செய்திருந்தது. அதில் காஷ்மீர் விடுதலைக்காக போராடும் பிரிவினைவாதிகள் பின் துணை நிற்போம் என அதில் குறிப்பிட்டிருந்தது. அதையடுத்து பலத்த சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் சியோலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தென் கொரிய அரசுக்கு ஹூண்டாய் விவகாரத்தில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.இதுதொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி “கடந்த ஐந்தாம் தேதி பாகிஸ்தானில் உள்ள ஹூண்டாய் கிளை நிறுவனம் காஷ்மீர் குறித்து வெளியிட்டிருந்த பதிவை கண்டோம்.
அதையடுத்து கடந்த ஆறாம் தேதி சியோலில் உள்ள எங்கள் தூதர் ஹூண்டாய் தலைமையகத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டறிந்தார்.அதன்பின்னர் சர்ச்சைக்குரிய அந்த பதிவு நீக்கப்பட்டது. கொரிய அரசின் தூதரை நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்திருந்தது. அவரிடம் ஹூண்டாய் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய பதிவு பற்றிய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளமுடியாது என எடுத்துரைக்கப்பட்டது. இறையாண்மை மற்றும் பிராந்திய விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் தவறான கருத்துக்களை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவிக்கப்பட்டது” என கூறினார்.
மேலும் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுங் யூய் யோங் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்புகொண்டு “இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் சமூக வலைதளத்தில் வந்த குற்றச்செயல் பதிவால் ஏற்பட்ட மனக்கசப்புக்கு வருந்துகிறேன்” என தொலைபேசியில் அழைத்து தெரிவித்துள்ளார்.
….உங்கள் பீமா
ஹூண்டாய் விவாகரம்.. மேலும் விவரங்களுக்கு …
https://www.madrastelegram.com/hyundai-india-issue-statement-after-netizens-kick/