23-2-22/14.50pm
டெல்லி : டெல்லி நீதிமன்றம் சிவில் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

குதுப்மினார் வளாகத்தில் 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்கள் இருப்பதாகவும் அதை புனரமைக்க அனுமதிக்கவேண்டும் எனவும் கிபி 1198ல் குதுபுதீன் ஐபக் ஆட்சிக்காலத்தில் ஹிந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு குதுப்மினார் எழுப்பட்டதாகவும் மனு ஒன்று சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேஹா சர்மா மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நேஹா தனது தீர்ப்பில் ” கடந்த கால தவறுகள் மீண்டும் திருத்தப்பட்டால் நிகழ்கால மற்றும் எதிர்கால அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும்” என கூறி அந்த மனுவை கடந்த செப்டம்பரில் தள்ளுபடி செய்திருந்தார். இந்த வழக்கை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் விஷ்ணு ஜெயின் மற்றும் அமிதா சச்தேவா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.


இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூஜா தல்வார் கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் . குதுப்மினார் வளாகத்தில் விஷ்ணு கோவில், சிவன் கோவில், விநாயகர் மற்றும் கௌரி ஆலயம்,ஹனுமன் ஆலயம் மற்றும் ஜெயின் ஆலயம் உட்பட 27 ஹிந்து ஆலயங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா
