Saturday, January 25, 2025
Home > செய்திகள் > திமுகவினர் டார்ச்சர்..! தற்கொலை ஆடியோ வெளியிட்ட வேலூர் எஸ்.ஐ ..!

திமுகவினர் டார்ச்சர்..! தற்கொலை ஆடியோ வெளியிட்ட வேலூர் எஸ்.ஐ ..!

29-12-21/16.32pm

வேலூர் : திமுக பிரமுகர்கள் தொடர் தொல்லை கொடுப்பதால் தற்கொலை செய்யப்போகிறேன் என ஆடியோ பதிவிட்டு காவலர்கள் வாட்சப் குழுவிற்கு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அனுப்பியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் பகுதி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஸ்ரீநிவாசன். இவர் நேற்று இரவு 11 மணிக்கு காவல்களுக்கென தனியாக இருக்கும் வாட்சப் குழுவிற்கு இரண்டு ஆடியோக்களை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் திமுக பிரபலங்கள் சிலர் பெயரை குறிப்பிட்டு இவர்கள் கொடுக்கும் தொடர் டார்ச்சர்களால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார்.

இன்னொரு ஆடியோவில் எனது காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட டிசி குப்பம் பகுதியில் துளசி என்பவர் பத்துலட்சம் சீட்டு பிடிக்கிறார். வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப கேட்டபோது தரமறுத்திருக்கிறார். பல காரணங்களை சொல்லி தட்டிக்கழித்திருக்கிறார். இந்த பிரச்சினையை ஆய்வாளர் சரியாக விசாரிக்கவில்லை. இதையடுத்து கடந்த 26ம் தேதி நடந்த மோதலில் துளசி தாக்கிவிட்டதாக அடுக்காம்பாறை அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

`

நான் பாதிக்கப்பட்டவர்களை வாக்குமூலம் பெற்று வழக்கு பதிய முயலுகையில் திமுக பிரமுகர் ஒருவர் என்னை வழக்கு பதிய கூடாது என கடும் தொல்லை அளிக்கிறார். மேலும் வழக்கு பதிந்தே ஆகவேண்டும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களே என கூறியபோது நான் ஆளும்கட்சி பிரமுகர் என மிரட்டுகிறார். மணல் திருடுகிறார்கள் பல வேளைகளில் ஈடுபடுகிறார்கள் கேட்டால் தொல்லை கொடுக்கிறார்கள் என்னால் மனஉளைச்சல் தாங்கமுடியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.

எனது இறப்பிற்கு பிறகு வரும் பணத்தை அரசாங்கத்திடம் இருந்து வாங்கி எனது மணைவியிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என அந்த ஆடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். மேலதிகாரிகளுக்கு இந்த ஆடியோ போகவே சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்திநிறுவனத்திற்கு ஸ்ரீநிவாசன் அளித்த பேட்டியில்,

```
```

“என்னை வழக்கு பதியவிடாமல் மிரட்டுகிறார்கள். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். எனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு முழுவதும் எனக்கு காவலுக்கு நின்றார்கள். காவலர்கள் சுதந்திரமாக செயல்பட ஆளும்கட்சியினரும் உயரதிகாரிகளும் ஒத்துழைக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா