Saturday, July 27, 2024
Home > செய்திகள் > தமிழை அச்சில் ஏற்றியது பாதிரியாரா..? இது என்னப்பா புது கதை

தமிழை அச்சில் ஏற்றியது பாதிரியாரா..? இது என்னப்பா புது கதை

24-4-22/8.27AM

சென்னை : தமிழனின் வரலாற்றை மாற்றி அல்லது திரித்து எழுதுவதில் திராவிட சிந்தனையாளர்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. ராமனை கற்பனை என்பவர்கள் ராவணனை கடவுள் என்பர். 10000 வருடத்திற்கும் மேலான புராதன கோவில்கள் சிற்பங்கள் இருந்தாலும் 2000 வருடங்கள் மட்டுமே பழமையான கீழடி பின் செல்வார்கள்.

தமிழனின் கட்டிடக்கலை சிற்பக்கலை நவீன தொழில்நுட்பம் என கோவில்களில் கண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒருவகையான மனோபாவம் கொண்டவர்களே திராவிட சிந்தனையாளர்கள் என பலர் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் மதமாற்ற பிரச்சினையால் தன்னுடைய உயிரைமாய்த்துக்கொண்ட மாணவி வழக்கில் கைதான கிறித்தவ பள்ளியின் வார்டனான ஒரு முதியவரை சிறைக்கே சென்று பட்டாடை போர்த்தி வரவேற்று சர்ச்சையை கிளப்பியவர் திமுக திருச்சி தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ். இவர் சட்டசபையில் பேசியது மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது.

`

“ஐந்து ஏக்கர் கல்லறைத்தோட்டம் ஊரெங்கும் அமைக்கவேண்டும். சில இடங்களில் தந்திருக்கிறார்கள். மேலும் பல மாவட்டங்களில் கல்லறைத்தோட்டம் வேண்டும். வீடுகளில் தங்களது சொந்த பட்டா நிலத்தில் ஜெபக்கூட்டம் நடத்துவதை ஒரு கூட்டம் தடுக்கிறது. இது மனித உரிமை மீறல். சமூக பதட்டத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக சில சக்திகள் செயல்படுகிறது. அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இதை முற்றுப்புள்ளி வைக்க ஆணையிடவேண்டும். தலித் கிறித்தவர்களும் வன்னிய கிறித்தவர்களும் உள்ள பிரச்சினையை தீர்க்க ஒரு தீர்மானம் போடவேண்டும். இந்தியாவிலேயே தமிழ் மொழி அச்சிலே ஏற காரணமாய் இருந்த தமிழ்த்தொண்டாற்றிய பாதிரியார் சீகன்பாக் அவர்களுக்கு தரங்கம்பாடியில் சிலை வைக்க வேண்டும்” என சட்டசபையில் இனிகோ இருதயராஜ் பேசியுள்ளார்.

```
```

ஆனால் இவர் கூறும் சீகன் பால்க் ஜெர்மனியை சேர்ந்த ப்ரொட்டெஸ்ண்ட் மதபோதகர் ஆவார். இவர் மொழி பெயர்த்தது விவிலியம் என அழைக்கப்படும் பைபிள் எனும் நூலைத்தான்.

மதபோதனைகளை தமிழர்களிடம் பரப்பவே அவர் பைபிளை தமிழாக்கம் செய்தார். இதில் என்ன தமிழ் தொண்டாற்றினார் என தமிழறிஞர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா