Saturday, July 27, 2024
Home > செய்திகள் > கேரளாவில் பகீர்..! ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் பற்றிய தகவலை SDPI க்கு துப்பு கொடுத்த போலீஸ்..!

கேரளாவில் பகீர்..! ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் பற்றிய தகவலை SDPI க்கு துப்பு கொடுத்த போலீஸ்..!

29-12-21/14.02pm

கேரளா : தொடர்ந்து ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் மற்றும் பிஜேபி பிரமுகர்கள் கேரளாவில் SDPI அமைப்பினரால் கொல்லப்பட்டு வருவதாக கேரளா செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் பற்றிய தகவலை SDPI அமைப்புக்கு ஒரு போலீசே துப்புக்கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் கரியமன்னூர் காவல்நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபிஸராக இருப்பவர் PK அனஸ். இவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக இஸ்லாமிய அமைப்புடன் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் பேருந்து நடத்துனரான மது சூதனன். சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் எஸ்டிபிஐ பற்றி விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களிலேயே அவர் ஓடும் பேருந்திலேயே SDPI குண்டர்கள் ஆறு பேரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

`

அந்த இஸ்லாமிய அமைப்பின் குண்டர்களுக்கு காவல்நிலையத்திலிருந்து தகவல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் நடந்த விசாரணையில் அனஸ் எனும் காவலர் முதலில் இடுக்கி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மது சூதனன் மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த பலர் பற்றிய நடவடிக்கைகள் இருப்பிடம் போன்ற ரகசியத்தகவல்களை இஸ்லாமிய அமைப்பினருடன் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

```
```

மதுசூதனன் உட்பட சிலரின் தனிப்பட்ட மெசேஜ் சாட் அனைத்தையும் கொடுத்ததாக தெரியவந்ததையடுத்து இன்று அனஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபியினர் அடுத்தடுத்து கொள்ளப்பட்டு வரும் வேளையில் காவல்துறையை சேர்ந்த ஒருவரே மத ரீதியாக செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என கேரள பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா