26-11-21/6.06am
சென்னை : தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறி விலைகள் விண்ணைத்தொடுகின்றன. தற்போதயை காய்கறி விலை உயர்வுக்கு திமுக எம்.எல்.ஏ காரணமாக இருக்கலாம் என இணையத்தில் கிசுக்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக வியாபாரிகளால் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அதிமுக அரசு வெளிநாடுகளில் இருந்து தக்காளி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கியது. அதன் பின்பு வியாபாரிகளால் விலை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் அதே போல இந்தவருடமும் மழையை காரணம் காட்டி வியாபாரிகள் விலையை உயர்த்தியுள்ளனர். இது மக்கள் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்து தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் தமிழக மக்களின் தலையில் திமுக அரசு பேரிடியை இறங்கியுள்ளது. இந்த விலைவாசி உயர்வைப்பற்றி இணையத்தில் பல்வேறு ஊகங்கள் உலவுகிறது.
அதில் ஒருவர் “கோயம்பேடு மார்க்கட் எந்த தொகுதி. விருகம்பாக்கம் தொகுதி. அந்த விருக்கம்பாக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் யார் தெரியுமா. அது வியாபாரிகள் சங்க தலைவரின் மகன். இப்போ புரியுதா தக்காளி வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி விலை உயர்வின் காரணம்” என கேள்வியெழுப்பியுள்ளார். இதை பிஜேபியை சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
……உங்கள் பீமா