Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > ஹிஜாப் வழக்கு.! டென்ஷனான உச்சநீதிமன்றம்..

ஹிஜாப் வழக்கு.! டென்ஷனான உச்சநீதிமன்றம்..

24-3-22/13.12pm

புது தில்லி : கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் ஐந்து பெண்கள் திடீரென ஹிஜாப் அணிந்து வந்து பிரச்சினைக்கு அடிகோலிட்டனர். இதை தொடர்ந்து மாணவிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஹிஜாபுக்கு எதிராக கருத்து கூறியவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மூதாட்டி உட்பட பலர் தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மார்ச் 15 அன்று கர்நாடக அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின்னர் மாணவிகள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

உயர்நீதிமன்ற மற்றும் தீர்ப்பு கூறப்போகும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொலை மிரட்டலுக்கு ஆளானார்கள். கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் ரிதுராஜ் அவர்களுக்கு வாட்சப்பில் கொலை மிரட்டல் விடப்பட்டதாக புகாரளித்திருந்தார். இதனிடையே இன்று ஹிஜாப் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. இஸ்லாமிய மாணவி ஆயிஷாத் ஷீபாவின் வழக்கறிஞர் தேவ்தத் காமத் நீதிமன்றத்தில் வாதாடினார்.

`

தேர்வுகள் இருப்பதால் வழக்கை தள்ளிப்போடவேண்டாம் என்றும் ஒருவருட கல்வி பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மார்ச் 28 தேர்வுகள் தொடங்க இருப்பதால் வழக்கை அவசர பட்டியலிடுமாறு கோரிக்கையெழுப்பினார். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் ஒருவருடம் இழப்பு ஏற்படும் என கூறினார்.

```
```

தலைமை நீதிபதி கூறுகையில் ” தேர்வுக்கும் ஹிஜாபுக்கும் தொடர்பில்லை. இந்த பிரச்சினையை பரபரப்பாக்க முயலாதீர்கள்” என கூறியதோடு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் தலையீட்டையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் வழக்கு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. வழக்கு தொடர்பான அனைத்து நீதிபதிகளுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா