Friday, March 29, 2024
Home > செய்திகள் > விவாகரத்து பெற்ற பெண் கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..! மும்பை உயர்நீதிமன்றம்

விவாகரத்து பெற்ற பெண் கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..! மும்பை உயர்நீதிமன்றம்

1-4-22/10.39AM

மும்பை : விவாகரத்து பெற்ற கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்ற அவ்ரங்காபாத் க கீழ்கோர்ட் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய கணவனும் மனைவியும் கடந்த 1992 ஏப்ரல் 17ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். 2015ல் இந்த வழக்கின் தீர்ப்பில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. நாந்தேட் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட கணவர் கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “எனது மனைவி எம்.ஏ. பி.எட் முடித்து ஆசிரியையாக உள்ளார்.எனக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை. எனது மனைவி பட்டம்பெறுவதற்காக எனது லட்சியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவரை ஊக்குவிப்பதற்காக வீட்டு விவகாரங்களை நிர்வகித்தேன்.தவறான நேர்மையற்ற நோக்கத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் அவமானம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன்.

`

எனக்கு நிரந்தர பணியெதுவும் இல்லை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. எனது மோசமான உடல்நிலை காரணமாக வாழ்வாதாரத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. எனது மனைவி மாதம் 30000 சம்பளம் வாங்குவதோடு மதிப்புமிக்க வீட்டுப்பொருட்கள் மற்றும் அசையாசொத்துக்களை வைத்திருக்கிறார்” என குறிப்பிட்டார்.

இந்தமனுவை எதிர்த்து பதில்மனு தாக்கல் செய்த மனைவி ” அவர் ஆட்டோ ரிக்ஸா குத்தகைக்கு எடுத்து வருமானம் ஈட்டுகிறார். மளிகை கடைவேறு நடத்திவருகிறார். எனது மகளின் பராமரிப்பிற்காக மாதம் 10000 வழங்கவேண்டும்” என அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழ்கோர்ட் மனு மீதான தீர்ப்பு வரும்வரை கணவனுக்கு 5000 மாதாமாதம் வழங்க வேண்டும்” என தீர்பளித்ததோடு மனைவியின் மாதசம்பளத்தில் 5000பிடித்து அதை நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டது.

```
```

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தை நாடிய மனைவி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பாரதி டாங்க்ரே முன் நேற்று வந்தது. அவர் ” 1955ஆம் ஆண்டு ஹிந்து திருமண சட்டப்பிரிவு 24ன் கீழ் கணவர் தாக்கல் செய்த இடைக்கால பராமரிப்பு விண்ணப்பம் கீழ்கோர்ட்டால் சரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பிரிவு 25ன் கீழ் நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது கணவருக்கு இடைக்கால பராமரிப்பு தொகை பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது. அதனால் கீழ் கோர்ட் உத்தரவை இந்த நீதிமன்றம் உறுதிசெய்கிறது” என தீர்ப்பளித்தார்.