Saturday, July 27, 2024
Home > அரசியல் > பிரதமர் மோடி பெயரில் மாற்றப்படும் அம்மா உணவகங்கள்..? திமுக அமைச்சரவை ஒப்புதல்..?

பிரதமர் மோடி பெயரில் மாற்றப்படும் அம்மா உணவகங்கள்..? திமுக அமைச்சரவை ஒப்புதல்..?

26-11-21/6.23pm

சென்னை : கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவகம் தற்போது பல இடங்களில் செயல்படாமல் இருக்கிறது. மேலும் அதையெல்லாம் இழுத்துமூட போவதாக வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில் அந்த உணவகங்களுக்கு பாரதபிரதமர் மோடியின் பெயரை வைக்கலாமா என பரிசீலிக்கப்பட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்மா உணவகங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருக்கிறது என திமுக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் நேற்று திடீரென கலைஞர் உணவகம் ஆரம்பிக்கப்படப்போவதாகவும் அதற்க்கு முழு நிதியும் மத்திய அரசு தரவேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியிருக்கிறது திமுக அரசு.

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் “வாக்குறுதி கொடுத்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அம்மா உணவகத்துக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியதை 23 கோடியாகக் குறைத்தது விடியல் அரசு. அதற்குப் பிறகு தான் ஆட்குறைப்பு, உணவு குறைப்பு என்று அனைத்தையும் அரங்கேற்றியது.

`

நிதிப் பற்றாக்குறை காரணமாக புதிய உணவகங்களைத் திறக்க இயலாது என்று சென்ற மாதமே கே.என் நேரு சொன்னார். இப்போ எதற்கு புதுசா மத்திய அரசுக்குக் கடிதம். ஈகோ பார்க்காத முதல்வர் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி எவ்வளவு சாதுரியமாக ஒரு திட்டத்தை முடக்கியுள்ளது திமுக. மத்திய அரசு இதற்கு நிதி வழங்காது. அதனால் தான் இந்த உணவகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று சொல்லி அனைத்து கடைகளையும் மூடிவிட்டு, ஒரு வருடத்துக்கு பிறகு நிதிநிலை சரியாகவிட்டது என்று சொல்லி அதே இடத்தில் கலைஞர் உணவகம் வரும்.” என பதிவிட்டுள்ளார்.

```
```

http://tnbudget.tn.gov.in/tnweb_files/demands/d34.pdf

…..உங்கள் பீமா