6-11-21/ 16.50pm
திருவள்ளுவர் புகைப்படத்திலும் சிலைகளிலும் உள்நோக்கத்தோடு திருவள்ளுவரது அடையாளங்களான விபூதி மற்றும் ருத்ராட்சம் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன என தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் விசிக நிறுவனர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ” ஏசு எனும் சொல்லே ஈசன் என்பதிலிருந்து உருவானதாக பேராசிரியர் தெய்வநாயகம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை நாம் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ” பாரதியார் யேசுபெருமான் உயிர்த்தெழுதலை பாடியிருக்கிறார். கிறித்துவம் என்பதே தமிழர்களின் இந்து மதம் தான். ஆரிய இந்து மதம் வேறு. தமிழர் இந்து மதம் வேறு. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புனித தோமையர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
கிறித்தவ மதமே தமிழர்களின் இந்து மதம். நடராஜர் ஆடுவது போல சித்தரிக்கப்படுவதே தீமையிலிருந்து இயேசு மீண்டு வந்தார் என்பதை குறிக்கிறது” என இதுபோன்ற அடுக்கடுக்கான கருத்துக்களை ஆதாரம் என கூறி தெய்வநாயகம் என்பவரை சுட்டிக்காட்டினார் திருமாவளவன்.
மேலும் இணையத்தில் திருவள்ளுவர் கிறித்தவர் என கூறியதற்கு பலவகையில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
……உங்கள் பீமா