27-11-21/11.20am
சென்னை : தமிழகத்தின் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலினின் நிர்வாக குறைபாடே மக்கள் உயிர் பலியானதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர் மாரிதாஸ் வெளியிட்டுள்ள காணொளியில் பல்வேறு ஆதாரங்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது ” சென்னையில் மழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை மூன்று மாதங்கள் தொடர்மழை கனமழை இருக்கும். அது 2021 மட்டுமல்ல கடந்த 25 வருடங்களாக மழையின் தாக்கம் இப்படித்தான் இருக்கிறது.
எந்த ஒரு முதல்வரும் செய்யாத காரியத்தை விவஸ்தை இல்லாமல் செய்திருக்கிறார் ஸ்டாலின். இந்த மூன்று மாதங்கள் கடுமையான மழை பெய்யும் என தெரிந்தும் ஒப்பந்தக்காரர்களை அழைத்து பணிகளை மும்முரப்படுத்த கட்டாயப்படுத்தியிருக்கிறார். ஒப்பந்த காரர்கள் மழைநேரம் பணி ஆரம்பித்தால் மழைநீர் செல்ல வழியிருக்காது என தெரிந்தும் அதிகாரத்தின் மீதுள்ள பயத்தால் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதன் விளைவே சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல நகரங்களில் நிலை இதுவே. மேலும் சென்னையை மழை தாக்கக்கூடும் என தெரிந்தும் மாநகராட்சி JE AE போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்றியிருக்கிறது.
இது நிர்வாகத்தின் மிகப்பெரிய குறைபாடு. மாநகராட்சியின் நிலை அறிந்த சென்னையின் வெள்ளத்தை பற்றி புரிதலுள்ள அதிகாரிகளை மாற்றியது மாபெரும் தவறு. இதனாலேயே கால்நடைகள் மட்டுமல்லாமல் பல மனித உயிர்களையும் இழந்துவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
…..உங்கள் பீமா