ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தனி அறை சட்டமன்ற கட்டிடத்தில் கட்டித்தரப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தன.
சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவை ஜனநாயகத்தின் கோவிலாகும். இங்கு ஒரு பிரிவினருக்கு மட்டும் தொழுகை நடத்த தனி அறை என்பது சமூக நல்லிணக்கத்துக்கு சவாலாக அமையும் எனஜார்கண்ட் பிஜேபி மாநில தலைவர் விமர்சித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பிஜேபி எம் எல் ஏக்கள் சட்டமன்ற வாசலில் அனுமான் சாலிசா பாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆஞ்சநேயர் கோவில் சட்டமன்ற வளாகத்தில் கட்ட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை ஜார்கண்ட் அரசு தடியடி நடத்தி கலைத்தது. இதில் ஒரு பெண் எம் எல் ஏவை அடித்து கீழே தள்ளி அவரது மார்பகத்தை அழுத்தி தரையோடு தரையாக படுக்க வைத்தனர் காவல்துறையினர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் ஜார்கண்ட் முதல்வருக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா