Sunday, October 2, 2022
Home > செய்திகள் > இது நல்லாருக்குண்ணே..! திருமாவளவனுக்காக விக்ரமன் வெளியிட்ட உருட்டு வீடியோ..!

இது நல்லாருக்குண்ணே..! திருமாவளவனுக்காக விக்ரமன் வெளியிட்ட உருட்டு வீடியோ..!

30-11-21/16.00pm

சென்னை : விசிக கட்சி நிறுவனரான திருமாவளவன் கணுக்கால் அளவு மழைநீரில் நடக்க மறுத்து அவருக்காக விசிக தொண்டர்கள் சேரை தள்ளி அதன்மேல் அவர் நடந்து வந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.

மேடை தோறும் சமூகநீதி பேசும் திருமாவளவனின் இந்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்ததது. இந்த வீடியோ பிஜேபியினரால் மட்டுமல்லாமல் பலராலும் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வீடியோவுக்கு பதிலளிக்க முடியாத விசிக பிரபலங்கள் இன்று ஒன்று கூடி திருமாவை கொண்டாடுவோம் என இணையத்தில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்க்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டிய நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டார். அவர் விளக்கம் கொடுக்க வேண்டாம் என கருதிய விசிக கட்சியினர் விக்ரமன் எனும் நிருபரை வீடியோ வெளியிடச்செய்துள்ளனர். விக்ரமன் பேசுகையில் திருமாவளவனை வானளாவ புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் திருமாவளவன் நாற்காலியில் ஏறி நடந்ததற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அது இன்னும் சிரிப்பை வரவழைத்திருக்கிறது என நெட்டிசன்கள் கிணத்தளித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் ” அன்புத்தம்பிகளின் கட்டளைக்கிணங்க திருமாவளவன் நாற்காலிகளில் ஏறி நடந்தார்” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை வேளச்சேரியில் நடந்ததாக பொய் கூறுகிறார் விக்ரமன் என நெட்டிசன்கள் மேலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா

Leave a Reply

Your email address will not be published.

error: Content is Protected! © The Madras Telegram