Saturday, July 27, 2024
Home > செய்திகள் > இது புதுசா இருக்கே..!! திமுக எம்.எல்.ஏ கிளப்பிய சர்ச்சை..!

இது புதுசா இருக்கே..!! திமுக எம்.எல்.ஏ கிளப்பிய சர்ச்சை..!

30-11-21/14.52pm

திண்டுக்கல் : வேலையில்லா தமிழகத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் அயராது பாடுபடுகிறார் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.

நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சில இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் திமுக தொண்டர்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தனர். இதில் 130 தனியார் நிறுவனங்கள் பங்குபெற்றிருந்தன. திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

`

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்குமார் பேசுகையில் “தமிழகத்தில் வேலை இல்லாத நிலையை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டமாகும்” என குறிப்பிட்டதாக தினமலர் நெல்லை பதிப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.

```
```

தமிழகத்தில் உள்ள பிரபல நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து வருவதாலும், பங்களாதேஸ் இலங்கை மற்றும் ரோஹிங்யாக்கள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதால் தமிழர்களுக்கு வேலை கிடைக்காத நிலை நிலவும் சூழலில் தமிழகத்தில் வேலையில்லாத நிலை உருவாக்க முதல்வரே தொலைநோக்கு திட்டத்துடன் செயல்படுகிறார் என திமுகவை எம்.எல்.ஏவே கூறியிருப்பதாக செய்தி வெளியாகியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

….உங்கள் பீமா