14-12-21/12.04pm
தமிழகம் : கடந்த ஆறுமாத காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத்தொடுகிறது. மீ மாதம் ஒண்ணாம் தேதி வரை 100 ரூபாய்க்கும் கீழ் இருந்த சமையல் எண்ணெயின் விலை மே 4 முதல் 198rs என இரட்டிப்பாகிப்போனது.
காய்கறிகளின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சாமானியர்கள் வாங்க முடியாத அளவிற்கு காய்கறிகளின் விலை தமிழக சாமானியர்களை அச்சுறுத்தி வருகிறது. சரி தொழில்துறை கட்டுமானத்துறை என எட்டிப்பார்த்தால் அதிலும் விலைவாசி இருமடங்காக மாறிப்போயுள்ளது. இதே நிலைமை நீடித்தால் தமிழகம் மீண்டும் வரட்சிப்பாதைக்கு சென்றுவிடும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பயமுறுத்துகின்றனர்.
எந்த ஒரு விவசாயியிடம் கேள்வியெழுப்பினாலும் தங்கள் வாழ்வாதாரம் உயரவில்லை வேண்டும் அன்றாட தேவைகளுக்கே வருமானம் வரவில்லை என்றும் தலையிலடித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை 120. கத்திரிக்காய் 140. மல்லி ஒரு கட்டு 35 ரூபாய். குடைமிளகாய் 160. நேற்று முன்தினம் வரை தக்காளி கிலோ 300 ரூபாய். இப்படி காய்கறிகள் விலை உச்சத்திலிருக்க விவசாயிகள் கண்ணீர் வடிப்பது ஏன் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று.
இப்படி மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்க விவசாயிகள் போர்வையில் நுழைந்து சீர்குலைக்க முயன்ற போராட்டக்காரர்களின் உண்மை முகம் இன்று வெளிப்பட்டுள்ளது. போராட்டத்தை நேற்றோடு முடித்துக் கொள்கிறோம் என அறிவித்த விவசாயிகள் நடுரோட்டில் கத்தை கத்தையாக 2000 மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் விவசாயிகளா இல்லை சமூகத்தை சீர்குலைக்க வந்த போராட்டக்காரர்களா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
…..உங்கள் பீமா