23-12-21/16.38pm
சென்னை : தமிழகத்தில் பிரதமர் மோடி மீதான வெறுப்பை பல அரசியல் கட்சிகள் தமிழகத்தில் கட்டமைத்துவிட்டன. இதை திருமாவளவன் ஒரு நேர்காணலில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
பாரத பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் இதுவரை மின்சாரத்தையே அறியாத பல கிராமங்களுக்கு ஒளியேற்றப்பட்டது. சாலைகளே இல்லாத பல கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரப்பட்டது. மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டது. இப்படி பல நன்மைகள் நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்திருக்க தமிழகத்தில் பிரதமர் மோடி மீதான வெறுப்பு குறைந்தபாடில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் .. https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் வரை மூன்று ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடி அவர்களின் முத்ரா திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் 1.76 கோடி பேர். தோராயமாக 69 கோடிகள் தமிழர்களுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல பாரதபிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் (பிரதம மந்திரி அவாஸ் யோஜனா) வின் கீழ் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடி என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

அதேபோல விவசாயிகளுக்கு பிரதமர் அளித்த நலத்திட்டம் விதவை பெண்களுக்கு வழங்கப்படும் திட்டம் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் பிரதமர் மோடியால் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்க அவர் மீதான வன்மத்தால் மக்களை திசை திருப்புகின்றன தமிழக அரசியல் கட்சிகள்.
ஒரு தனிமனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் அறிந்து கொள்ள முயன்றால் அவனுக்கு வரும் இடையூறுகள் ஏராளம். ஆனால் தமிழக பிஜேபியினர் இதை முன்னெடுக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இதுவரை மோடியின் திட்டத்தால் பயன்பெற்றவர்கள் யார் என அறிந்து கொண்டு அவர்கள் விவரங்களை பொதுவெளியில் வெளியிடலாம்.

முத்ரா லோன் வாங்கிக்கொண்டு பயனடைந்தவர்கள் யார் என்கிற விவரத்தை தெரிந்து கொண்டு மக்களிடம் சேர்க்கலாம். இந்தியாவில் பிஜேபி ஆளும் மாநிலங்களை விட மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற தமிழர்களே அதிகம் என்கிற உண்மையை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிக்கொண்டுவந்து தமிழக மக்களிடம் வெளிச்சம் போட்டு காண்பிக்கலாம்.
வரும் காலங்களில் அரசியல் இன்னும் கடினமானதாய் இருக்கும். மக்களின் நன்மதிப்பை பெற குறைந்த பட்சம் செய்த நன்மைகளையாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க தமிழக பிஜேபி முன்வரவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் மோடியின் ஒவ்வொரு திட்டங்களையும் பயனர்களிடம் நேரடியாக எடுத்த்துக்கூற பிஜேபி முயலவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா