30-11-21/16.34pm
சென்னை : முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திமுக எம்பிக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகளிடமிருந்து ஒதுங்கியே நின்றனர். நேற்று எதிர்கட்சிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளில் கலந்து கொள்ளாமல் திமுக எம்பிக்கள் ஒதுங்கிக் கொண்டனர். மேலும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி துதி பாடி வாங்கியும் கட்டிக் கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அதில் “2021 ல் நடத்தப்பட்ட நீட் தேர்வில் அரசு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் எத்தனை பழங்குடியின மாணவ மாணவிகள் மற்றும் கிராமப்புற மாணவ மாணவிகள் பயனடைந்தனர் என பாராளுமன்றத்தில் சொல்வீர்களா,
திமுகவை சேர்ந்த பிரபலங்களுக்கு எத்தனை மருத்துவக்கல்லூரி இருக்கிறது அதில் 2015 க்கு முன் எவ்வளவு கட்டணம் தற்போது எவ்வளவு கட்டணம் என சொல்வீர்களா” என கேட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் ஏகே ராஜன் கமிட்டியின் அறிக்கையையும் பாராளுமன்றத்தில் வெளியிடவேண்டும் என குண்டை தூக்கிபோட்டிருந்தார்.
முதல்வர் முக ஸ்டாலின் காதுகளுக்கு இந்த செய்திகள் நேற்று சென்றடைந்ததாக தெரிகிறது. அதையடுத்து எம்பிக்களை தொடர்புகொண்ட தலைமை பாராளுமன்றத்தில் அடக்கி வாசிக்க கட்டளையிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் இந்த வாரம் ரகசிய ஆலோசனை நடைபெற இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா