Thursday, March 28, 2024
Home > அரசியல் > உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபி எம்.எல்.ஏ ராஜினாமா

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபி எம்.எல்.ஏ ராஜினாமா

21-4-22/12.29PM

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கைலாஷ் சந்திர கஹடோரி. இவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகர் ரித்து கந்தூரியிடம் இன்று காலை தனது ராஜினாமாவை கைலாஷ் அளித்ததாக மாநில பிஜேபி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி படுதோல்வியடைந்தார்.

இருந்தபோதிலும் இரண்டாவதுமுறையாக புஷ்கார்சிங் தாமியே முதல்வராக நியமிக்கப்பட்டார். மீண்டும் அவர் முதல்வராக தொடர ஆறுமாத காலங்களுக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியில் வென்றாகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்நிலையில் சம்பாவத் தொகுதி எம்.எல்.ஏ முதல்வர் தாமிக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

`
kailash chandra

ராஜினாமா செய்தகையோடு முதல்வர் தாமியை நேரில் சென்று சந்தித்தார்.

```
```
pushkar dhami

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கைலாஷ் ” முதல்வர் சம்பாவத் தொகுதியில் போட்டியிட்டால் அது எனக்கு மிகப்பெரிய கௌரவமாக இருக்கும். நான் ராஜினாமா செய்ய எந்த ஒரு அழுத்தமும் இல்லை” என கூறினார்.

….உங்கள் பீமா