Tuesday, April 22, 2025
Home > அரசியல் > நாடகமாடிய மெஹபூபா..! ஒரு மணி நேரத்தில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

நாடகமாடிய மெஹபூபா..! ஒரு மணி நேரத்தில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி பிரிவினை ஆதரவாளர். காஷ்மிருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளை மத்திய அரசு நீக்கியதில் பெரிதும் பாதிக்கப்பட்டது காஷ்மீர் மக்கள் அல்ல. முப்தி போன்ற அரசியல்வாதிகள்தான். மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் அனுபவித்த சலுகைகள் அனைத்தும் பறிபோன பின்பு மீண்டும் சுகம் காண துடிக்கிறார்கள் என காஷ்மீர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாத கிராமத்தில் மத்திய அரசு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மேலும் பல மாவட்டங்கள் மின் இணைப்பை முதன்முறையாக பெற்றிருக்கின்றன. ஆனால் மெஹபூபா மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என பிஜேபியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது முப்தி தன்னை வீட்டுக்காவலில் வைத்து விட்டார்கள் என ட்வீட் செய்திருக்கிறார். “ஆப்கான் மக்களை பற்றி கவலைப்படும் அரசு காஷ்மீர் மக்களை பற்றி சிந்திக்க மறுக்கிறது. காஷ்மீரில் இயல்பு நிலை இல்லாததால் என்னை அடைத்து வைத்திருப்பதாக நிர்வாகம் சொல்கிறது .” என ட்வீட் செய்துள்ளார்.

`

ஆனால் உண்மை அதுவல்ல என கூறும் காவல்துறையினர் இது குறித்து மேலும் கூறியதாவது, “கடந்த செவ்வாய்க்கிழமை பிரிவினைவாதி கிலானி மரணமடைந்தார். அவருக்கு வயது 91. அவரது உடலின் மீது பாகிஸ்தான் தேசிய கொடியை போர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் கிலானி குடும்பத்தினர் மீது FIR பதியப்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தினர் கிலானிக்கு இறுதிமரியாதை செலுத்த விடவில்லை என முரணான தகவலை வெளியிடுகின்றனர் . ஆனால் இறுதிமரியாதை செலுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட நான்கு வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

```
```

கலவர சூழல் நிலவும் பகுதியான குலாமுக்கு இன்று மெஹபூபா செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கிறார். அதனாலேயே கலவர சூழல் நிலவும் இடத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீரில் எங்கு வேண்டுமானாலும் இன்று செல்லலாம். குலாம் செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டிருக்கிறது.” என காவல்துறை தெரிவிக்கிறது. ஒரு மணி நேரத்திற்குள் ஏன் இந்த இரட்டைவேடம் என பிஜேபியினர் முப்தியை விமர்சித்துவருகின்றனர்.